search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனிக்கு எந்த இடம்: சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விவரிக்கிறார்
    X

    டோனிக்கு எந்த இடம்: சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விவரிக்கிறார்

    சிஎஸ்கே-யில் பெரும்பாலும் டோனி 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்கிறார். தேவைக்கேற்ப எந்த இடத்திலும் களம் இறக்குவோம் என பிளெமிங் தெரிவித்துள்ளார். #CSK
    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்எஸ் டோனி. இவர் ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் டோனியை ஐந்தாவது இடத்தில் களமிறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் நான்காவது இடத்தில்தான் டோனி களம் இறங்குவார் என்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘டோனி கடந்த சீசனில் அதிகப்படியாக நான்காவது இடத்தில்தான் களம் இறங்கி பேட்டிங் செய்தார். ஆனால், நாங்கள் அவரை கொஞ்சம் வசதிக்கு ஏற்ப முன்ன பின்ன பயன்படுத்திக் கொள்வோம். இருந்தாலும் அவரது இடத்தில் மாற்றம் இருக்காது.



    கடந்த 10 மாதங்களாக டோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கேதர் ஜாதவ் போன்ற புதிய வீரர்களை பெற்றுள்ளோம். அவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். ஆகவே, பேட்டிங் ஆர்டரில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×