search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலைப்பளு என்பது வீரர்களுக்கு வீரர் மாறுபட்டது: சச்சின் தெண்டுல்கர் சொல்கிறார்
    X

    வேலைப்பளு என்பது வீரர்களுக்கு வீரர் மாறுபட்டது: சச்சின் தெண்டுல்கர் சொல்கிறார்

    இந்திய வீரர்களின் வேலைப்பளு என்பது வீரர்களுக்கு வீரர் மாறுபட்டது என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #2019WorldCup #TeamIndia
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன் ஐபிஎல் தொடர் நடக்கிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோத வேண்டும். அதன்படி இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் 14 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    உலகக்கோப்பைக்கும் ஐபிஎல் தொடருக்கும் இடையில் குறைந்த நாட்களே இடைவெளி உள்ளது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட அடையாளம் காணப்பட்டுள்ள வீரர்களின் வேலைப்பளு குறித்து இந்திய அணி நிர்வாகம் கவலையடைந்துள்ளது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வீரர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வீரர்களின் வேலைப்பளு குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் “உலகக்கோப்பை தொடருக்கு முன் தயாராகுவது ஒவ்வொரு வீரர்களுக்கும் மாறுபட்டது. ஆகவே வேலைப்பளுவை நிர்வகிப்பதும் ஒவ்வொரு வீரர்களுக்கும் மாறுபட்டது.

    என்னைப் பொறுத்த வகையில் முன்னோக்கிச் செல்லும் உத்வேகம் முக்கியமானது. ஒவ்வொரு வீரர்களும் தனிப்பட்ட முறையில் ஓய்வு தேவை என்றால், அதை சிறந்த முறையில் மதிப்பிட்டுக் கொள்ளலாம். அதனால் ஒவ்வொரு வீரர்களும் தனிப்பட்ட முறையில் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    பும்ராவின் வேலைப்பளுவை பார்த்தீர்கள் என்றார், பேட்டிங் மட்டுமே செய்யும் விராட் கோலிக்கும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டோனிக்கும் இடையில் மாறுபட்டது. அனைத்து வீரர்களுக்கும் அதிக அளவில் அனுபவம் உள்ளது. அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள்” என்றார்.
    Next Story
    ×