search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு திரும்பிய வார்னர்: 43 பந்தில் 65 ரன்கள் விளாசி அசத்தல்
    X

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு திரும்பிய வார்னர்: 43 பந்தில் 65 ரன்கள் விளாசி அசத்தல்

    ஓராண்டு தடைக்குப்பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு திரும்பிய டேவிட் வார்னர் பயிற்சி ஆட்டத்தில் 65 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். #IPL2019 #SRH
    ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் ஆஸ்திரேலியாவின் இடது கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது.

    இதனால் கடந்த ஐபிஎல் சீசனில் டேவிட் வார்னர் இடம்பெறவில்லை. நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாக விளையாடி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.



    இந்த மாதம் 28-ந்தேதியுடன் வார்னர் மீதான தடை முடிவுக்கு வருகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுவிட்டார். தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 43 பந்தில் 65 ரன்கள் குவித்து முத்திரை படைத்தார்.

    அதேபோல் மற்றொரு வீரரான ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    Next Story
    ×