search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    12 வருடத்திற்குப் பிறகு டெல்லியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது: இசாந்த் ஷர்மா
    X

    12 வருடத்திற்குப் பிறகு டெல்லியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது: இசாந்த் ஷர்மா

    12-வது ஐபிஎல் சீசனில்தான் சொந்த மைதான அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று இசாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார். #IPL2019
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இசாந்த் ஷர்மா. டெல்லியைச் சேர்ந்த இவர் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் விளையாடியவர். ஐபிஎல் தொடரில் இவர் டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார்.

    தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். டெல்லி அணி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. சிறு வயதில் இருந்தே விளையாடிய மைதானத்திற்கு சொந்தமான அணியில் முதன்முறையாக விளையாட இருப்பதை இசாந்த் ஷர்மா ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    இதுகுறித்து இசாந்த் ஷர்மா கூறுகையில் ‘‘எனக்கு மற்ற மைதானதங்களை விட பெரோஸ் ஷா கோட்லா மைதானம் சிறப்பு வாய்ந்தது. 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இருந்தே இங்கேதான் விளையாடி வருகிறேன். என்னுடைய எல்லாப் போட்டிகளிலும் இங்கேதான் விளையாடியுள்ளேன். இங்கு எனக்கு ஏராளமான நினைவுகள் உண்டு.



    எனக்கு மட்டுமல்ல, டெல்லியில் இருந்து கிரிக்கெட் வீரர்களாக வந்துள்ள அனைவருக்கும், பெரோஸ் ஷா கோட்லா மைதானம் குறித்த நினைவுகள் இருக்கும். ஏனென்றால், எல்லோரும் இங்கிருந்துதான் அவர்களது கிரிக்கெட்டை தொடங்கியிருப்பார்கள். இங்கிருந்துதான் நாங்கள் இந்திய அணிக்கு விளையாடுவதற்கு சென்றோம்.

    12 வருடத்திற்குப் பிறகு சொந்த மைதானத்திற்குரிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நான் மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். என்னுடைய சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். இந்த வருடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×