search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயாங்க் அகர்வால் 85 ரன்கள் குவிப்பு: மகாராஷ்டிராவை வீழ்த்தி கோப்பையை வென்றது கர்நாடகா
    X

    மயாங்க் அகர்வால் 85 ரன்கள் குவிப்பு: மகாராஷ்டிராவை வீழ்த்தி கோப்பையை வென்றது கர்நாடகா

    சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மயாங்க் அகர்வால் 85 ரன்கள் குவிக்க கர்நாடகா மகாராஷ்டிராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு இந்தூரில் நடைபெற்றது. இதில் கர்நாடகா - மகாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி மகாராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்தது. கெய்க்வாட், திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கெய்க்வாட் 12 ரன்னிலும், திரிபாதி 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நவுசாத் ஷேக் ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 69 ரன்கள் குவிக்க மகாராஷ்டிரா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி பேட்டிங் செய்தது. ரோகன் கதம், ஷரத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷரத் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து கதம் உடன் மயாங்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கதம் 39 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மயாங்க் அகர்வால் 57 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க கர்நாடகா 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 159 குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
    Next Story
    ×