search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யூரோ சாம்பியன்ஸ் லீக்: லியோன் அணியை 5-1 என வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    யூரோ சாம்பியன்ஸ் லீக்: லியோன் அணியை 5-1 என வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்

    யூரோ சாம்பியன்ஸ் லீக் 2-வது லெக்கில் லியோன் அணியை 5-1 என வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியது. #UCL #Barcelona
    கிளப் அணிகளுக்கு இடையிலான யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒருமுறை அந்தந்த அணிகளின் சொந்த மைதானத்தில் மோத வேண்டும்.

    ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - லியோன் அணிகள் மோதின. லியோன் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்றது.

    சொந்த மைதானத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். 31-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்திலும் பார்சிலோனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 58-வது நிமிடத்தில் லியோன் அணியின் லூகாஸ் கோல் அடித்தார். 78-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடித்தார். 81-வது நிமிடத்தில் ஜெரார்டு பிக்காய் ஒரு கோலும், 86-வது நிமிடத்தில் டெம்பேல் ஒரு கோலும் அடித்தனர். இதனால் பார்சிலோனா 5-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    Next Story
    ×