search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதி கேப்டனான டோனிக்கு ஓய்வு கொடுத்தது ஆச்சரியம் - பி‌ஷன் சிங் பெடி
    X

    பாதி கேப்டனான டோனிக்கு ஓய்வு கொடுத்தது ஆச்சரியம் - பி‌ஷன் சிங் பெடி

    எம்எஸ் டோனிக்கு கடைசி 2 போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பவனுமான பி‌ஷன் சிங் பெடி கருத்து தெரிவித்துள்ளார். #BishanSinghBedi #MSDhoni
    புதுடெல்லி:

    கிரிக்கெட் ரசிகர்களால் அதிகமாக நேசிக்கப்படுபவர் டோனி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டார்.

    டோனி இல்லாமல் இந்திய அணி விக்கெட் கீப்பிங் திணறியது தெளிவாக தெரிந்தது. இளம் வீரரான ரிசப்பந்த் கீப்பிங்கில் சில வாய்ப்புகளை கோட்டை விட்டார்.

    இந்த நிலையில் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பவனுமான பி‌ஷன் சிங் பெடி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கிரிக்கெட் வாரியத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து பெடி கூறியதாவது:-

    டோனிக்கு 2 ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது ஏன்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக நான் யார் மீதும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஆச்சரியமானது.

    டோனி இல்லாதது இந்திய அணியில் பாதிப்பை வெளிப்படுத்தியது. விக்கெட் கீப்பிங், பேட்டிங் மற்றும் மைதானத்திலும் இது எதிரொலித்தது. அவர் அணிக்கு பாதி கேப்டன் போல் திகழ்கிறார்.

    டோனி இளம் வீரர் இல்லை. ஆனாலும் அவர் அணிக்கு தேவைப்படுகிறார். அணியை அமைதிப்படுத்தும் தன்மை அவரிடம் உள்ளது. கேப்டன் கோலியும் அவரை சாந்துள்ளார். டோனி இல்லாததால் அவர் கடினத்தன்மையுடன் இருந்தார். இது நல்லதல்ல இந்திய அணியில் தேவையில்லாமல் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    உலககோப்பைக்கு இன்னும் 2½ மாதங்களே உள்ளன. கடந்த ஒரு ஆண்டாகவே இந்திய அணி நிர்வாகம் சோதனை செய்து வருகிறது. வருகிற 23-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டி கடும் சிக்கலை ஏற்படுத்தும். ஆல்ரவுண்டராக திகழும் ஜடேஜாவை ஒரங் கட்டுவது ஏன்? என்று தெரியவில்லை. ரிசப்பந்த்க்கு பல்வேறு அறிவுரைகள் தேவை. ஏற்கனவே செய்த தவறுகளை அவர் தொடர்கிறார்.

    இவ்வாறு பெடி கூறியுள்ளார். #BishanSinghBedi #MSDhoni
    Next Story
    ×