search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்டியன் வெல்ஸ்: கடும் போராட்டத்திற்குப்பின் சிமோனா ஹாலெப் வெற்றி, உடல் நலக்குறைவால் செரீனா விலகல்
    X

    இன்டியன் வெல்ஸ்: கடும் போராட்டத்திற்குப்பின் சிமோனா ஹாலெப் வெற்றி, உடல் நலக்குறைவால் செரீனா விலகல்

    இன்டியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் கடும் பேராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். #IndianWells
    இன்டியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் உள்ள கல்போர்னியாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் உலகின் நம்பர்-2 வீராங்கனையான சிமோனா ஹாலெப், தகுதிச் சுற்றின் மூலம் முதன்மை சுற்றுக்கு முன்னேறிய உக்ரைனின் கட்டேரினா கொஸ்லோவாவை எதிர்கொண்டார்.

    இதில் சிமோனா ஹாலெப்பிற்கு கட்டேரினா கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட் ‘டை-பிரேக்’ வரை சென்றது. கடும் போராட்டத்திற்குப் பின் ஹாலெப் முதல் செட்டை 7(7)-6(3) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டையும் கடும் போராட்டத்திற்குப் பின் 7-5 எனக்கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஹாலெப் காலிறுக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.



    மற்றொரு ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் முகுருசாவை எதிர்கொண்டார். இதில் 3-6, 0-1 என செரீனா பின்தங்கிய நிலையில், உடல்நிலை சரியில்லாததால் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் முகுருசா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    Next Story
    ×