search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்த வாய்ப்பிற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்: விஜய் சங்கர் சொல்கிறார்
    X

    இந்த வாய்ப்பிற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்: விஜய் சங்கர் சொல்கிறார்

    நெருக்கடியான நிலையில் பந்து வீசி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் வாய்பிற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன் என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு தனது வாழ்நாளில் முக்கியமான திருப்புமுனை நாளாகும். நாக்பூரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    ரோகித் சர்மா (0), தவான் (21), அம்பதி ராயுடு (18) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். விஜய் சங்கர் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    எந்தவித நெருக்கடியும் இல்லாமல் முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் அடித்தார். 41 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். இருந்தாலும் இந்தியா 250 ரன்கள் அடிக்க அவரது ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தாத இருந்தது. ஏனெனில் அடுத்து வந்த கேதர் ஜாதவ் 11 ரன்னிலும், டோனி ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கி விளையாடியது. அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. அதன்பின் இந்திய பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் போட்டி பரபரப்புக்குள்ளானது.

    விஜய் சங்கர் வீசிய முதல் ஓவரில் ஆஸ்திரேலியா 13 ரன்கள் அடித்தது. அதனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவருக்கு அதன்பின் ஓவர் கொடுக்கவில்லை. 6-வது பந்து வீச்சாளரான கேதர் ஜாதவை விராட் கோலி தொடர்ந்து பயன்படுத்தினார். அவர் 8 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 45 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டாய்னிஸ் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார். அந்த அணிக்கு கடைசி 5 ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது.

    ஆட்டம் பரபரப்பாக சென்றது. அதேவேளையில் பும்ரா, ஷமி ஆகியோருக்கு தலா இரண்டு ஓவர்கள் மட்டுமே இருந்தது. ஒரு ஓவரை விஜய் சங்கர் அல்லது கேதர் ஜாதவ் வீச வேண்டும். 46-வது ஓவரை வீசி விஜய் சங்கர் அழைக்கலாம் என விராட் கோலி விரும்பினார். இதுகுறித்து டோனி மற்றும் ரோகித் சரிமாவிடம் விராட் கோலி ஆலோசனை கேட்டார். அப்போது இருவரும் பும்ராவை வீச வைப்போம். அவர் விக்கெட் வீழ்த்திவிட்டால் போட்டி நம் பக்கம் திரும்பிவிடும் என்று இருவரும் விராட் கோலியிடம் கூறினார்.

    அதை ஏற்றுக்கொண்ட விராட் கோலி 46-வது ஓவரை பும்ராவை வீச வைத்தார். அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த பும்ரா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஷமி வீசிய 47-வது ஓவரில் 7 ரன்களும், பும்ரா வீசிய 48-வது ஓவரில் 1 ரன்களும், ஷமி வீசிய 49-வது ஓவரில் 9 ரன்களும் அடித்தது ஆஸ்திரேலியா.

    இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை கேதர் ஜாதவ் வீசுவாரா? விஜய் சங்கர் வீசுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் விராட் கோலி விஜய் சங்கரை அழைத்தார்.

    விஜய் சங்கர் முதல் பந்தில் ஸ்டாய்னியை எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார். 2-வது பந்தில் இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்தார். 3-வது பந்தில் ஜம்பாவை க்ளீன் போல்டு மூலம் வீழ்த்தினார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கருக்கு முதன்முறையாக இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

    இதனால் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய சங்கர், பந்து வீச்சிலும் அசத்தி மேட்ச் வின்னராக திகழ்ந்தார்.



    நெருக்கடியான நிலை கடைசி ஓவரை வீசியது குறித்து விஜய் சங்கர் கூறுகையில் ‘‘முதல் ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்த நிலையில், அந்த மோசமான நிலையில் இருந்து திரும்புவதற்கான வாய்ப்புதான் கடைசி ஓவர். மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் பந்து வீசும் வாய்ப்பிற்காக நான் காத்துக் கொண்டிருந்தார். ஏனென்றால், நான் சிறப்பாக பந்து வீசுவேன் என்றாலும், அவர்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருந்தேன்.

    43-வது ஓவர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கடைசி ஓவரை நான் வீசி வேண்டியிருக்கும். அப்போது அந்த ரனுக்குள் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்து அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டு என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

    அதனால் எனக்குள்ளேயே நான் சற்று தயாராகிக் கொண்டு வந்தேன். மனதளவில் மிகவும் தெளிவாக இருந்தேன். ஆடுகளத்தில் பந்து சற்று ரிவர்ஸ் ஸ்விங் ஆனதால், சரியான லெந்தில் பந்து பிட்ச் செய்ய விரும்பினேன்.’’ என்றார்.
    Next Story
    ×