search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேர்ஸ்டோவ்
    X
    பேர்ஸ்டோவ்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்: இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பேர்ஸ்டோவின் அதிரடியால் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. ஷாய் ஹோப் (6), கிறிஸ் கெய்ல் (15), ஹெட்மையர் (14), பிராவோ (30) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினார்கள்.

    அதன்பின் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 37 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 58 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் டாம் குர்ரான் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அலெக்ஸ் ஹேல்ஸ் 11 ரன்னிலும், ஜோ ரூட் ரன்ஏதும் எடுக்காமலும், மோர்கன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.


    பூரன்

    ஆனால் பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி 40 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 68 ரன்கள் குவித்தார். டேன்லி 30 ரன்களும், பில்லிங்ஸ் 18 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் காட்ரெல் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி வருகிற 8-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×