search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்சர் அடிப்பார்களே என்று நினைத்தால் சிறந்த ஸ்பின்னராக முடியாது: குல்தீப் யாதவ்
    X

    சிக்சர் அடிப்பார்களே என்று நினைத்தால் சிறந்த ஸ்பின்னராக முடியாது: குல்தீப் யாதவ்

    சிக்சர் அடிப்பார்களே என்றும், விக்கெட் வீழ்த்தலாம் என்றும் நினைத்தால் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக முடியாது என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். #INDvAUS
    இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த பிறகு, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் சேர்க்கப்பட்டனர்.

    இருவரும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இருவரும் இணைந்து 18 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதில் இந்தியா 11 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 50-க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருவருக்கும் இடம் கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது. இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் சிக்சர் அடிப்பார்களே என்று நினைத்தாலும், விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தாலும் சிறந்த ஒருநாள் ஸ்பின்னராக முடியாது என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘ஒருவருடன் இணைந்து விளையாடும்போது ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். அதனடிப்படையில் சாஹலிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன். நாங்கள் ஒன்றாக இணைந்து விளையாடிய போதெல்லாம் ஒன்றாக இணைந்து முன்னேற்றம் காண முயற்சி செய்வோம்.

    எதிரணி பேட்ஸ்மேன் சிக்ஸ் அடித்து விடுவாரோ என்ற பயத்தை நீங்கள் போக்காவிடில் சிறந்த ஸ்பின்னராக முடியாது. அதேபோல் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற நினைப்பில் பந்து வீசக்கூடாது. இந்த எண்ணத்தில்தான் நாங்கள் இருவரும் பந்து வீசி வருகிறோம். ஒருநாள் போட்டியில் மிடில் ஓவர்கள் முக்கியமானது. நீங்கள் அட்டக் செய்யாவிடில், எதிரணி 320 ரன்களை எடுத்து விடும். அதனால் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே இலக்கு’’ என்றார்.
    Next Story
    ×