search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ச்சியாக அதிக வாய்ப்புகள் பெற நான் தகுதியானவன்: ரகானே ஆதங்கம்
    X

    தொடர்ச்சியாக அதிக வாய்ப்புகள் பெற நான் தகுதியானவன்: ரகானே ஆதங்கம்

    டெஸ்ட் போட்டியில் துணைக் கேப்டனாக இருக்கும் ரகானே, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்காதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். #Rahane
    இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

    தொடக்க பேட்ஸ்மேன் முதல் மிடில் வரிசையில் எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார். 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தாலும், ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பின் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடியது. இந்தத் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    ஆனால் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் அணிக்கு திரும்பிய பிறகு ரகானேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அணியில் சேர்ப்பதும், நீக்குவதுமாக இருப்பதால் அவர் தொடர்ச்சியாக விளையாட முடியவில்லை. இதனால் அவரது ஆட்டத்திறன் குறைந்துள்ளது.

    தற்போது உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

    அணியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் தேர்வுக்குழு குறித்து விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால் தற்போது தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற நான் தகுதியானவன் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘தொடர்ச்சியாக அணிக்கு தேர்வு செய்யப்படாதது எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் எனது பேட்டிங் மூலம் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். ஆனால், சில சமயங்களில் உண்மைகளை சொல்வதும் முக்கியமானதாக இருக்கிறது.

    நான் எப்போதுமே அணிக்கு முன்னுரிமை கொடுத்து, அணியின் நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவினரின் முடிவில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அந்த நம்பிக்கை தொடரும். எனினும் எனது திறமை அங்கீகரிக்கப்பட வேண்டியதும் அவசியம்.

    ஒரு வீரராக நான் அணிக்காகவே விளையாடி இருக்கிறேன். அதனால் எனக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இது மட்டுமே எனது விருப்பம்’’ என்றார்.
    Next Story
    ×