search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் கீப்பர் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ஆசை: ஆஸி. பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்காம்ப்
    X

    விக்கெட் கீப்பர் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ஆசை: ஆஸி. பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்காம்ப்

    விக்கெட் கீப்பர் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ஆசை என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்காம்ப் தெரிவித்துள்ளார். #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.

    ஆனால் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்காம்ப் விக்கெட் கீப்பராக களம் இறக்கப்பட்டார். விக்கெட் கீப்பராக பணியாற்றிய ஹேண்ட்ஸ்காம்ப், உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் கீப்பர் பணியை செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹேண்ட்ஸ்காம்ப் கூறுகையில் ‘‘பேட்ஸ்மேன் பணியுடன் விக்கெட் கீப்பர் வேலையையும் சேர்த்து என்னால் செய்ய முடியும். ஆனால், அதற்கான உடற்தகுதியை பெற்றுள்ளேனா? என்று பார்க்க வேண்டும்.

    இந்தியாவிற்கு எதிரான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்டால், கீப்பிங் பணியோடு நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி சிறப்பாக பேட்டிங் செய்து, விக்கெட்டிற்கு எதிராக சிறப்பாக ஓடுவது குறித்து விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. அணிக்காக எல்லாம் சரியாக அமையும்.

    டி20 போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்படுவது மிகவும் கடினமானது அல்ல. ஏனென்றால் 20 ஓவர்கள் மட்டுமே விளையாடினால் போதுமானது. ஒருநாள் போட்டி சற்று கடினமானது. குறிப்பாக இந்தியாவில் வெப்பம் அதிகமாக இருக்கும். அத்துடன் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பணிபுரிய வேண்டும். ஆகவே, கடினம்தான். இருந்தாலும் நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×