search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட்: 2-வது சதத்தை பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் அய்யர்
    X

    சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட்: 2-வது சதத்தை பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் அய்யர்

    சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் முன்னணி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் 2-வது முறையாக சதம் அடித்துள்ளார். #SyedMushtaqAliTrophy #ShreyasIyer
    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - சிக்கிம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது.

    ஷ்ரேயாஸ் அய்யர் 55 பந்துகளை எதிர்கொண்டு 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உள்ளூர் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.  இதற்கு முன் ரிஷப் பந்த், ஐபிஎல் போட்டியில் கடந்த ஆண்டு, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மும்பை - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் 143 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது.

    தொடக்க பேட்ஸ்மேன்கள் பிரித்வி ஷா (0), ரகானே (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். அவர் 55 பந்தில் 5 பவுண்டரி, 10 சிக்சருடன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் அடிக்க மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சிக்கிம் அணிக்கு எதிராக சதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் மத்திய பிரதேசம் அணிக்கும் எதிராகவும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    ஜார்க்கண்ட் அணியின் இஷான் கிஷன் அடுத்தடுத்த போட்டியில் சதம் அடித்துள்ள நிலையில் தற்போது ஷ்ரேயாஸ் அய்யரும் இரண்டு சதங்கள் விளாசியுள்ளார்.
    Next Story
    ×