search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரோ இந்தியா விமான கண்காட்சி- போர் விமானத்தில் பறந்த பி.வி.சிந்து
    X

    ஏரோ இந்தியா விமான கண்காட்சி- போர் விமானத்தில் பறந்த பி.வி.சிந்து

    பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் பங்கேற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார். #AeroIndia2019 #PVSindhu
    பெங்களூரு:

    பெங்களூரின் எலஹங்கா விமானப்படை தளத்தில், பாதுகாப்புத் துறை மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் 'ஏரோ இந்தியா - 2019' சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றுவருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 20-ம் தேதி இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் அதிவேக போர் விமானங்கள், கண்காட்சி மையங்கள் இடம்பெற்றுள்ளன. போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான, தேஜஸ் விமானமும் இந்த கண்காட்சியில் பறந்தது. அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ரபேல் விமானம் வானில் சீறிப் பாய்ந்து சாகசம் நிகழ்த்தியது.


    இந்நிலையில் கண்காட்சியின் 4-ம் நாளான இன்று பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விண்வெளித்துறையில் பெண்களின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில், சிறப்பு நிகழ்வாக, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தேஜஸ் விமானத்தில் பறந்தார். துணை விமானியாக பச்சை நிற சீருடை அணிந்து வந்த பி.வி.சிந்து, விமானத்தில் ஏறும்போது பார்வையாளர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் விமானத்தின் காக்பிட் பகுதியில் அமர்ந்து சிறிது நேரம் பயணித்தார்.

    இந்த கண்காட்சி நாளை நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. #AeroIndia2019 #PVSindhu
    Next Story
    ×