search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தை வீழ்த்தி பதிலடி- ஹெட்மயர் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
    X

    இங்கிலாந்தை வீழ்த்தி பதிலடி- ஹெட்மயர் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #engvswi #hetmyer

    பிரிட்ஜ்டவுன்:

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ் டவுனில் நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. ஹெட்மயர் அபாரமாக விளையாடி 4-வது சதத்தை பதிவு செய்தார்.

    அவர் 83 பந்தில் 104 ரன்னும், (7பவுண்டரி, 4 சிக்சர்), கிறிஸ்கெய்ல் 50 ரன்னும் எடுத்தனர். மார்விட் பென் ஸ்டோக்ஸ், ஆதில் ரஷீத், புளுன் கெட் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.


    பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 263 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 26 ரன்னில் வெற்றி பெற்றது. பென்ஸ்டோக்ஸ் 79 ரன்னும், கேப்டன் மார்கன் 70 ரன்னும், எடுத்தனர். ஷெல்டன் கோட்ரெல் 5 விக்கெட்டும், ஹோல்டர் 3 விக்கெட்டும் எடுத்தனர்.


    முதல் போட்டியில் 361 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியால் தற்போது 290 ரன் இலக்கை எட்ட முடியாமல் தோற்றது. முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு வெஸ்ட் இண்டீஸ் பதிலடி கொடுத்தது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது.  #engvswi #hetmyer

    Next Story
    ×