search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ஓவர் கிரிக்கெட் - இந்தியா, ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை
    X

    20 ஓவர் கிரிக்கெட் - இந்தியா, ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (24-ந்தேதி) நடக்கிறது. #AUSvIND

    விசாகப்பட்டினம்:

    இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (24-ந்தேதி) நடக்கிறது.

    இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது டெஸ்ட் தொடரையும், ஒரு நாள் தொடரையும் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.

    தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எளிதில் வீழ்த்தும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    நியூசிலாந்து தொடரில் பாதியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். இதே போல வேகப்பந்து வீரர் பும்ராவும் மீண்டும் களம் திரும்பி உள்ளார். ஆல்ரவுண்டர் ஹார்த்திக் பாண்ட்யா காயத்தால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகி உள்ளார். அவரது இடத்தில் ஜடேஜா தேர்வாகி இருக்கிறார்.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, தவான், டோனி, அம்பதி ராயுடு ஆகியோரும் பந்து வீச்சில் பும்ரா, யசுவேந்திரசஹால், கர்ணல் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ் ஹோம் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது. 19-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இந்தியா 11-ல் ஆஸ்திரேலியா 6-ல் வெற்றி பெற்றுள்ளன. 1 ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலி வி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், டோனி, விஜய் சங்கர், தினேஷ் கார்த் திக், ரி‌ஷப்பன்ட், கர்ணல் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ், பும்ரா, மான்யக் மார்க்கன்டே, சித்தார்த் கவூல், யசுவேந்திர சஹால்.

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ் ஹோம், பெகரன்டர்ஸ், அலெக்ஸ் கேர்ரே, நாதன் கோல்ட்டர், நாதன் லயன், கும்மின்ஸ், கானே ரிச்சர்சன், டி ஆர்சி ஷார்ட், ஸ்டோன்ஸ், டர்னா, ஆடம் ஜம்பா, ஹைரிச்சர்ட்சன். #viratkohli #AUSvIND

    Next Story
    ×