search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: விசா வழங்காததால் ஒலிம்பிக் தகுதியை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் கோரிக்கை
    X

    உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: விசா வழங்காததால் ஒலிம்பிக் தகுதியை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் கோரிக்கை

    உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு விசா வழங்காததால் ஒலிம்பிக் தகுதியை திரும்பப்பெற வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் டெல்லியில் வருகிற சனிக்கிழமை தொடங்குகிறது. 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் போட்டியில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக அவர்கள் இன்று டெல்லி வருவதாக இருந்தது.

    ஆனால் கடந்த 14-ந்தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால் இந்தியா அந்த இரண்டு வீரர்களுக்கும் விசா வழங்க மறுத்துவிட்டது.

    இதனால் உலகக்கோப்பையில் இருந்து 2020-ம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்யும் தகுதி வாய்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்று பாகிஸ்தான் சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசனுக்கு மெயில் அனுப்பியுள்ளது.
    Next Story
    ×