search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலககோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் - பிசிசிஐ
    X

    உலககோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் - பிசிசிஐ

    2019-ம் ஆண்டு ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. #ICC #BCCI #WorldCup2019 #Pulwamaattack
    புதுடெல்லி:

    காஷ்மீரில், இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறும்போது, ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி லீக்கில் பாகிஸ்தானுடன் (ஜூன் 16-ந்தேதி) மோதுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே உலக கோப்பையை வெல்லக்கூடிய திறமை இந்திய அணியிடம் இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.



    பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதை தவிர்த்தால் புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் வந்து நாம் விளையாடாவிட்டால் இந்தியா கோப்பையை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ள பிசிசிஐ உலககோப்பை அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஐசிசியை அணுகவில்லை எனவும் தெரிவித்துள்ளது. #ICC #BCCI #WorldCup2019 #Pulwamaattack
    Next Story
    ×