search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய ஜூனியர் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு வெற்றி
    X

    தேசிய ஜூனியர் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு வெற்றி

    மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்றும் வரும் தேசிய ஜூனியர் ஆக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. #Hockey
    ஆண்களுக்கான 9-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி (‘ஏ’ டிவிசன்) மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, தனது முதல் லீக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்பை சந்தித்தது.

    இதில் தமிழ்நாடு அணி 5-4 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தியது. தமிழக அணியில் எஸ்.கார்த்தி 4 கோலும், கே.திராஸ் ஒரு கோலும் போட்டனர். தமிழக அணி 2-வது ஆட்டத்தில் இமாச்சல பிரதேசத்தை இன்று சந்திக்கிறது.
    Next Story
    ×