search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கு பிறகு கிறிஸ்கெய்ல் ஓய்வு
    X

    ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கு பிறகு கிறிஸ்கெய்ல் ஓய்வு

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ChrisGayle #ChrisGayleRetire #ODIs #ICCWorldCup2019
    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல்.டெஸ்டில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.

    இந்த நிலையில் 39 வயதான கிறிஸ் கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    கெய்ல் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஆடினார். அதன் பிறகு அவர் உலக கோப்பையில் தான் விளையாட உள்ளார். உலக கோப்பை போட்டி மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இது அவருக்கு 5-வது உலக கோப்பை ஆகும்.

    கிறிஸ் கெய்ல் 284 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9727 ரன் எடுத்துள்ளார். சராசரி 37.12 ஆகும். 23 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 215 ரன் குவித்துள்ளார்.

    10 ஆயிரம் ரன்னை தொட கெய்லுக்கு இன்னும் 273 ரன் தேவையாகும். லாராவின் சாதனையை முறியடிக்க 677 ரன்கள் தேவை. இந்த இரண்டு சாதனைகளில் ஒன்றை அவர் உலக கோப்பையில் முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கெய்ல் கடைசியாக 2014-ம் ஆண்டு டெஸ்டில் விளையாடினார். 103 டெஸ்டில் விளையாடி 7214 ரன் எடுத்து இருந்தார்.  #ChrisGayle #ChrisGayleRetire #ODIs #ICCWorldCup2019
    Next Story
    ×