search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் அரையிறுதி: ஹோபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்
    X

    பிக் பாஷ் அரையிறுதி: ஹோபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்

    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மெல்போர்ன் ஸ்டார்ஸ். #BigBashLeague
    பிக் பாஷ் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ், மெல்போர்ன் ரெனேகட்ஸ், சிட்னி சிக்சர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் முதல இடம் பிடித்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - 4-வது இடம் பிடித்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 5 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. ஆர்கி ஷார்ட் 35 ரன்களும், மெக்டெர்மோட் 53 ரன்களும், பெய்லி 37 ரன்களும் அடிக்க அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. மெல்மோர்ன் ஸ்டார்ஸ் அணியின் வொர்ரால் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் டங்க் (9), ஸ்டாய்னிஸ் (18) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.



    அதன்பின் வந்த ஹேண்ட்ஸ்காம்ப் 26 பந்தில் 35 ரன்களும், மேடின்சன் 9 பந்தில் 18 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மேக்ஸ்வெல் 33 பந்தில் 43 ரன்களும், காட்ச் 22 பந்தில் 33 ரன்களும் அடிக்க மெல்போர்ன் ஸ்டார்ஸ் 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் 2-வது அரையிறுதிப் போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    Next Story
    ×