search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூயார்க் ஓபன் டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் முதல் சுற்றில் தோல்வி
    X

    நியூயார்க் ஓபன் டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் முதல் சுற்றில் தோல்வி

    நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 1-2 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். #NewYorkOpen
    நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தைவான் வீரர் ஜேசன் ஜங்கை எதிர்கொண்டார். 143-வது இடத்தில் இருக்கும் ஜேசன் ஜங் ராமநாதனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ராமநாதன் முதல் செட்டை 3-6 என இழந்தார்.

    ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி அதை 6-3 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் ராமநாதன் சோபிக்கவில்லை. அந்த செட்டை 1-6 என இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார். ராம்குமார் இரண்டு தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×