search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் - இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி
    X

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் - இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 232 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #WIvENG
    செயின்ட் லூசியா:

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 361 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 485 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோரூட் 122 ரன்கள் எடுத்தார்.

    485 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் ஆடியது. இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    வெஸ்ட்இண்டீஸ் 69.5 ஓவரில் 252 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து 232 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ரோஸ்டன் சேஸ் தனி ஒருவராக போராடி அடித்த சதம் பலன் அளிக்காமல் போனது. அவர் 102 ரன்னும், அல்ஜாரி ஜோசப் 34 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன், மொய்ன் அலி தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், மார்க்வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இங்கிலாந்து அணி முதல் 2 டெஸ்டிலும் ஏற்கனவே தோற்று தொடரை இழந்துவிட்டது. தற்போது பெற்ற இந்த வெற்றி ஆறுதலானது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை வெஸ்ட்இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்டில் 381 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது.

    அடுத்து இரு அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 20-ந்தேதி பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடக்கிறது. #WIvENG
    Next Story
    ×