search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விதர்பா 2-வது இன்னிங்சில் 200 ரன்னில் சுருண்டது: சவுராஷ்டிராவிற்கு 206 ரன்கள் வெற்றி இலக்கு
    X

    விதர்பா 2-வது இன்னிங்சில் 200 ரன்னில் சுருண்டது: சவுராஷ்டிராவிற்கு 206 ரன்கள் வெற்றி இலக்கு

    விதர்பா 2-வது இன்னிங்சில் 200 ரன்னில் சுருண்டதால், சவுராஷ்டிராவின் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #RanjiTrophy
    நாக்பூரில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா - சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் அணியான விதர்பா பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் விதர்பா 312 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய சவுராஷ்டிரா 307 ரன்கள் சேர்த்தது.

    5 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற விதர்பா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் விதர்பா 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. கணேஷ் சதிஷ் 24 ரன்னுடனும், வாசிம் ஜாபர் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சவுராஷ்டிரா அணியின் ஜடேஜா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விதர்பா விக்கெட் மளமளவென சரிந்தது. கணேஷ் சதிஷ் 35 ரன்னிலும், ஜாபர் 11 ரன்னினும் ஆட்டமிழந்தனர். தாக்குப்பிடித்து விளையாடிய சர்வாத் 49 ரன்னில் ஜடேஜா பந்தில் அவட்டாக விதர்பா 200 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து விதர்பா 205 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் சவுராஷ்டிராவுக்கு 206 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்தியாவின் நட்சத்திர வீரரான புஜாரா நிலைத்து நின்று விளையாடினால் சவுராஷ்டிரா கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.
    Next Story
    ×