search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி ஒருநாள் போட்டி - நியூசிலாந்து வெற்றி பெற 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    கடைசி ஒருநாள் போட்டி - நியூசிலாந்து வெற்றி பெற 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    வெல்லிங்டனில் நடைபெற்று வரும் 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. #NZvIND #TeamIndia
    வெல்லிங்டன்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது. விராட்கோலி இல்லாத அணி 4-வது போட்டியில் 92 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.

    இதனால் இன்றைய கடைசி போட்டிக்கான அணியில் 3 மாற்றம் இருந்தது. காயத்தில் இருந்து குணம் அடைந்ததால் டோனி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல முகமது‌ஷமி, விஜய்சங்கர் ஆகியோரும் இடம் பெற்றனர். தினேஷ்கார்த்திக், குல்தீப்யாதவ், கலீல் அகமது ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர்.

    நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. குப்திப்புக்கு பதிலாக முன்ரோ இடம் பெற்றார்.

    ‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. 18 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.

    ரோகித்சர்மா 2 ரன்னிலும், சுப்மன் ஹில் 7 ரன்னிலும் ஹென்றி பந்தில் ஆட்டம் இழந்தனர். தவான் 6 ரன்னிலும், டோனி 1 ரன்னிலும் போல்ட் பந்தில் ‘அவுட்’ ஆனார்கள்.



    5-வது விக்கெட்டான அம்பதிராயுடு- விஜய் சங்கர் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் நிதானமாகவே ஆடினார்கள். இதனால் 29-வது ஓவரில் தான் இந்தியா 100 ரன்னை தொட முடிந்தது.

    சிறப்பாக விளையாடி வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் தனது அறிமுக அரை சதத்தை எடுப்பார் என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் 64 பந்தில் 4 பவுண்டரியுடன் 45 ரன்களை எடுத்த அவர் துரதிருஷ்டவசமாக ‘ரன்அவுட்’ ஆனார்.

    இறுதியில் இந்திய அணி 49. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது.  அதிகபட்சமாக அம்பதிராயுடு 90, விஜய் சங்கரும் ஹர்திக் பாண்டியாவும் தலா 45 ரன்களை எடுத்தனர்.

    நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 4, பவுல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  #NZvIND #TeamIndia
    Next Story
    ×