search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி
    X

    பெண்கள் கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி

    பெண்கள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. #NZWvINDW
    நியூசிலாந்து - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர். 3-வது வீராங்கனை தீப்தி ஷர்மா 52 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 149 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து வீராங்கனை அனா பேட்டர்சன் நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை பேட்ஸ் (57), 3-வது களம் இறங்கிய சட்டர்வைட் (66 நாட்அவுட்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து 29.2. ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×