search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பாண்டியா குறித்து கேட்ட கேள்விக்கு ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்சனின் பதில்
    X

    ஹர்திக் பாண்டியா குறித்து கேட்ட கேள்விக்கு ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்சனின் பதில்

    பெண்கள் குறித்து ஹர்திக் பாண்டியா கூறிய கருத்துப் பற்றி கேள்வி கேட்டதற்கு ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்சன் பதில் அளித்துள்ளார். #ICC #HardikPandya
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவரும் தொடக்க பேட்ஸ்மேனுமான லோகேஷ் ராகுலும்  ‘காபி வித் கரண்’ டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது பெண்கள் குறித்த கேள்விக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்தனர்.

    இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனால் பிசிசிஐ இருவரையும் சஸ்பெண்ட் செய்தது. பின்னர் விசாரணை தாமதமாகி வருவதால் தற்போது இருவரையும் விளையாட அனுமதித்துள்ளது.

    இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிக்காக ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்சன் இந்தியா வந்துள்ளார்.

    அவரிடம் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ரிச்சர்ட்சன் பதில் அளிக்கையில் ‘‘இந்த விவகாரத்தில் வீரர் இடம்பிடித்துள்ள நாட்டிற்குத்தான் கவலை. பொதுவாக இந்திய அணி சிறந்த பண்புடையது. அவர்கள் போட்டிக்கு வந்த பிறகு நடுவருடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் சரியான உத்வேகத்துடன் விளையாடுகிறார்கள்.

    இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. விராட் கோலி கிரிக்கெட்டிற்கான சிறந்த தூதர். அவர் டி20 கிரிக்கெட் போட்டியின் மீதான பேரார்வம் பற்றி மட்டும் பேசுவதில்லை. டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியை பற்றியும் பேசுகிறார். சிறந்த வீரர்கள் அனைவரும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட ஆசைப்பட வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×