search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 போட்டிகளிலும் அனைத்து துறையிலும் அசத்தல்: இதைவிட கூடுதலாக கேட்க இயலாது- விராட் கோலி
    X

    3 போட்டிகளிலும் அனைத்து துறையிலும் அசத்தல்: இதைவிட கூடுதலாக கேட்க இயலாது- விராட் கோலி

    மூன்று போட்டிகளிலும் அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம், இதைவிட கூடுதலாக ஏதும் கேட்க இயலாது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் நியூசிலாந்து மைதானங்கள் மிகவும் சிறியது. அனைத்து போட்டிகளிலும் 300 ரன்களுக்கு மேல் அடிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இந்தியாவின் துள்ளியமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து திணறியது. முதல் மற்றும் இன்று நடைபெற்ற போட்டிகளிலும் நியூசிலாந்தை இந்தியா 300 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது. 2-வது போட்டியில் இந்தியா 300 ரன்னைத் தாண்டியது.

    இன்றைய 3-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 244 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இந்தியா ரோகித் சர்மா (62), விராட் கோலி (60), தினேஷ் கார்த்திக் (38 அவுட் இல்லை), அம்பதி ராயுடு (40 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    போட்டி முடிந்த நிலையில் வெற்றி குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ அமேசிங். மூன்று போட்டிகளிலும் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது. இதைவிட சிறப்பான செயல்பாட்டை வீரர்களிடம் கேட்க முடியாது.

    இரக்கமற்ற தற்போதைய இந்திய அணி குறித்து எனக்கு பெருமையாக உள்ளது. நாங்கள் எல்லோரும் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம். அம்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்யும்போது கூட, ஓய்வு அறையில் இருந்து ஒவ்வொரு ரன்களுக்கும் சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தோம். இப்படித்தான் வீரர்கள் அறையில் சூழ்நிலை நிலவுகிறது.

    இந்திய அணியில் உள்ள வீரர்கள் அவர்களுடைய திறமைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதை மைதானத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள். சில போட்டிகளில் பேட்ஸ்மேன் ரன் அடிக்க இயலாமல் போகலாம். அவர் ரன் குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் இருப்பார். சில நேரத்தில் அவர் அபாயகர நிலையை அடைய வாய்ப்பு உள்ளதால், அந்த வீரர் குறித்து எதிரணி சற்று கலக்கமடைவர்.

    ஆகவே, இதுபோன்ற நம்பிக்கை தற்போது அணியில் நிலவி வருகிறது. பேட்டிங் துறை சிறப்பாக உள்ளதுபோல், பந்து வீச்சு துறையும் சிறப்பாக உள்ளது. வீரர்கள் இதுபோன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, ஏன் நாங்கள் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க இயலாது. கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×