search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குசால் மெண்டிஸ் போல்டாகிய காட்சி
    X
    குசால் மெண்டிஸ் போல்டாகிய காட்சி

    பிரிஸ்பேன் பகல்-இரவு டெஸ்ட்: ஆஸி. வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 144 ரன்னில் சுருண்டது

    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. #AUSvSL
    இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. பகல் - இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமானே 12 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சண்டிமல் 5 ரன்னிலும், கருணரத்னே 24 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா 5 ரன்னிலும் வெளியேறினர்.


    ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள்

    அதன்பின்னர் ரோசன் சில்வாவுடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்த ரோசன் சில்வா 56 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். ஒருபுறம் டிக்வெல்லா நிலைத்து நிற்க மறுபக்கம் பெரேரா 1 ரன்னிலும், லக்மல் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 106 ரன்னுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது.


    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டார்க்

    இதற்குமேல் நின்று ஆடினால் பலனில்லை என்பதை புரிந்து கொண்ட டிக்வெல்லா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த டிக்வெல்லா 64 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை அணி 144 ரன்கள் எடுத்திருந்தது. சமீரா ரன்ஏதும் எடுக்காமல் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது.


    டிக்வெல்லா

    ஆஸ்திரேலிய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    Next Story
    ×