search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மிரிதி மந்தனா
    X
    ஸ்மிரிதி மந்தனா

    பெண்கள் கிரிக்கெட்: ஸ்மிரிதி மந்தனா சதத்தால் நியூசிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

    நியூசிலாந்து பெண்கள் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஸ்மிரிதி மந்தனா சதம் விளாச இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZWvINDW
    நியூசிலாந்து - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டம் நேப்பியரில் இன்று நடைபெற்றது. இந்திய அணி கேப்டன் மிதலி ராஜ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய வீராங்கனைகளில் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து வீராங்கனைகள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் நியூசிலாந்து பெண்கள் அணி 48.4 ஓவரில் 192 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஏக்தா பிஸ்ட், பூனம் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ஜெர்மையா ரோட்ரிக்கஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.


    ரோட்ரிக்ஸ்

    ஸ்மிரிதி மந்தனா 104 பந்தில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா - ரோட்ரிக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. மறுமுனையில் விளையாடிய ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 94 பந்தில் 81 ரன்கள் சேர்க்க இந்திய பெண்கள் அணி 33 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    Next Story
    ×