search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கோப்பை அரையிறுதி: கேரளாவை 106 ரன்னில் சுருட்டியது விதர்பா- உமேஷ் யாதவ் 7 விக்கெட் சாய்த்தார்
    X

    ரஞ்சி கோப்பை அரையிறுதி: கேரளாவை 106 ரன்னில் சுருட்டியது விதர்பா- உமேஷ் யாதவ் 7 விக்கெட் சாய்த்தார்

    ரஞ்சி கோப்பை அரையிறுதியில் விதர்பாவிற்கு எதிராக உமேஷ் யாதவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கேரளா முதல் இன்னிங்சில் 106 ரன்னில் சுருண்டது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. கேரள மாநிலம் வயநாடில் நடக்கும் போட்டியில் கேரளா - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கேரள அணி முதலில் பேட்டிங் செய்தது. விதர்பா அணியின் குர்பானி, உமேஷ் யாதவ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கேரள அணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர். 7-வது பேட்ஸ்மேன் விஷ்னு வினோத் மட்டும் தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுக்க அந்த அணி 106 ரன்னில் சுருண்டது. 28.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.



    உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசி 12 ஓவரில் 48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் சாய்த்தார். ராஜ்னீஷ் குர்பானி 11.4 ஓவரில் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் விதர்பா அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    Next Story
    ×