search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா
    X

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் நடைபெற்ற 3-வது காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கார்நாடக அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பிஷ்னோய் 79 ரன்களும், கேப்டன் லாம்ரோர் 50 ரன்களும் அடித்தனர். கர்நாடக அணி சார்பில் மிதுன், கவுதம் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சில் விளையாடியது. ராஜஸ்தானின் துள்ளியமான பந்து வீச்சில் கர்நாடக பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினார்கள். ஆனால் 9-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் வினய் குமார் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் அடிக்க கர்நாடகா 263 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 39 ரன்கள் பின்தங்கிய நிலையில் ராஜஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. 2-வது இன்னிங்சிலும் ராஜஸ்தான் அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை. லாம்ரோர் 42 ரன்களும், பிஸ்ட் 44 ரன்களும் அடிக்க 222 ரன்னில் சுருண்டது.

    இதனால் ராஜஸ்தான் அணி 183 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கர்நாடகா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 18 ரன்னுடனும், ரோனித் மோர் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மோர் மேலும் 3 ரன்கள் எடுத்து 8 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் கேப்டன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இருவரும் அரைசதம் அடிக்க கர்நாடக அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    Next Story
    ×