search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #AUSOpen
    கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. 5-ம் நாளான இன்று ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) - டிரிட்ஸ் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினர். இதில் ரோஜர் பெடரர் 6-2, 7-5, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு) - டிகோ ஸ்வர்ட்ஜ்மேன் (அர்ஜென்டினா) மோதினர். இதில் பெர்டிச் 5-7, 6-3, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் கிரீஸ் வீரர் டிஸ்டிஸ்பஸ் 6-3, 3-6, 7(9) - 6(7), 6-4 என்ற செட் கணக்கில் பசிஸ்வில்லியை (ஜார்ஜியா) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தின் பேர்ட்டி 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் மரியா சக்காரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    Next Story
    ×