search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி
    X

    டேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி

    வங்காளதேச பிரிமீயர் லீக்கில் டேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக மாறி பேட்டிங் செய்ததில் விதிமீறல் இல்லை என்று எம்சிசி தெரிவித்துள்ளது. #DavidWarner
    வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சியால்ஹெட் சிக்சர்ஸ் - ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    சியால்ஹெட் சிக்சர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 19-வது ஓவரை கிறிஸ் கெய்ல் வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த வார்னர், அடுத்த இரண்டு பந்திலும் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை.

    இதனால் வலது கை பேட்ஸ்மேனாக மாறினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய வார்னர், அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இடது கை பேட்ஸ்மேனான டேவிட் வார்னர், சிறந்த வலது கை பேட்ஸ்மேன் போன்று பேட்டிங் செய்து அனைவரையும் வியக்க வைத்தார்.

    ஆனால், வார்னர் பேட்டிங் செய்தது ஐசிசி-யின் விதிமுறைக்கு உட்பட்டதுதானா? என்ற கேள்வியை எழுப்பியது. அதனால் கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் வார்னரின் பேட்டிங் பதிவை ஆய்வு செய்தது. அப்போது அவர் விதிமுறைப்படிதான் பேட்டிங் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.
    Next Story
    ×