search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிஷிகோரி
    X
    நிஷிகோரி

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4 மணி நேரம் போராடி 3-வது சுற்றுக்கு முன்னேறினர் நிஷிகோரி, ரயோனிக்

    மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் நிஷிகோரி, சுவிட்டோலினா 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #AUSOpen
    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 8-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்), 2-வது சுற்றில் கரோல்விக்கை (குரோஷியா) எதிர்கொண்டார்.

    இதில் நிஷிகோரி 6-3, 7(8) - 6(6), 5-7, 5-7, 7(9)-6(7) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற நிஷிகோரி 3 மணி நேரம் 48 நிமிடங்கள் போராட வேண்டியிருந்தது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள கரோலினா பிலிஸ்கோவா (செக்குடியரசு) 4-6, 6-1, 6-0 என்ற கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த பிரிங்கிளை வீழ்த்தினார். 6-வது வரிசையில் இருக்கும் சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் குஷிமோவாவை (சுலோவாக்கியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.


    ரயோனிக்

    மற்ற ஆட்டங்களில் மேடிசன் கெயஸ் (அமெரிக்கா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்) கேமிலா (இத்தாலி) ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் மற்றொரு போட்டியில் 6-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக் - சுவிட்சர்லாந்தின் ஸ்டன் வாரிங்கா மோதினார்கள்.

    இந்த ஆட்டம் 4 மணி நேரம் 1 நிமிடம் வரை நீடித்தது. நான்கு செட் வரை சென்ற இந்த ஆட்டத்தில் நான்கு செட்களும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ரயோனிக் 6(4) - 7(7), 7(8) - 6(6), 7(13) - 6(11), 7(7) - 6(5) என கடும் போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்றார்.
    Next Story
    ×