search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்
    X

    கடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்

    மெல்போர்னில் நாளை நடக்கும் போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபடும்.

    ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் இடம்பிடித்திருந்தார். அவர் இரண்டு போட்டிகளிலும் 109 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. இதனால் நாளைய போட்டிக்கான ஆஸ்திரேலிய ஆடும் லெவன் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆடம் ஜம்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதேபோல் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரேன்டர்ப் காயம் அடைந்துள்ளதால், பில்லி ஸ்டேன்லேக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), 2. அலெக்ஸ் கேரி (துணைக்கேப்டன்), 3. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 4. கவாஜா, 5. ஷான் மார்ஷ், 6. மேக்ஸ்வெல், 7. ரிச்சர்ட்சன், 8. பீட்டர் சிடில், 9. பில்லி ஸ்டேன்லேக், 10. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 11. ஆடம் ஜம்பா.
    Next Story
    ×