search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா சதமடித்த நான்கு போட்டியிலும் இந்தியா தோல்வி: மோசமான சாதனையில் முதலிடம்
    X

    ரோகித் சர்மா சதமடித்த நான்கு போட்டியிலும் இந்தியா தோல்வி: மோசமான சாதனையில் முதலிடம்

    ஆஸ்திரேலிய மண்ணில் அதிக முறை சதம் அடித்து, போட்டியை வெல்ல முடியாதவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். #RohitSharma
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 288 ரன்கள் குவித்தது. பின்னர் 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா 10 பவுண்டரி, 6 சிக்சருடன் 129 பந்தில் 133 ரன்கள் விளாசினார்.

    ரோகித் சர்மா சதம் அடித்தாலும் இந்தியாவின் மற்ற வீரர்கள் சொதப்பிய காரணத்தால் 34 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    ரோகித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் இதற்கு முன்பு மூன்று சதங்கள் விளாசியுள்ளார். இந்த சதத்துடன் நான்கு சதங்களாகும். இந்த நான்கு போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்துள்ளது.

    இதன்மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதம் அடித்தும், அணியை வெற்றி பெற வைக்க முடியாத வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார்.

    2015-ல் மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் 138 ரன்கள் குவித்திருந்தார். 2016-ல் பெர்த்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே வருடத்தில் பிரிஸ்பேன் ஆட்டத்தில் 124 ரன்களும், தற்போது சிட்னி டெஸ்டில் 133 ரன்களும் அடித்துள்ளார்.



    வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 3 போட்டியிலும் சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×