search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன- துணைக் கேப்டன் ரோகித் சர்மா
    X

    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன- துணைக் கேப்டன் ரோகித் சர்மா

    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன என்று துணைக்கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #TeamIndia
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சிட்னியில் நாளைமறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா பேட்டிளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கு முன் நாங்கள் 13 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறோம். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுடன் செல்ல முடியுமா? அல்லது வீரர்களின் எண்ணிக்கை குறையுமா? என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் காயம் மற்றும் பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் வேண்டுமென்றால் இருக்கலாம்.

    இந்த வருடத்தில் நாங்கள் ஏராளமான போட்டியில் விளையாட இருக்கிறோம். அதனால் காயங்கள் ஏற்படலாம். காயங்களால் வீரர்கள் இடம்பெற முடியாமல் போவதை தவிர்த்து மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் இருப்பதாக நினைக்கவில்லை. ஒவ்வொரு இடத்தையும் (Slots) பார்த்தீர்கள் என்றால், தனிப்பட்ட வீரர்களால் சிறப்பான வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் ஒவ்வொரு வீரர்களின் பார்ம்-ஐ பொறுத்துதான் அணியில் இடம் கிடைக்கும். இங்கிலாந்து செல்வதற்கு யாருக்கும் உத்தரவாதம் கிடையாது.

    முன்னதாகவே ஆடும் லெவன் அணி குறித்து கூற இயலாது. ஆனால் நாங்கள் விளையாடும் 13 போட்டிகளில் இடம்பிடிக்கும் வீரர்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஐபிஎல் உள்பட இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட இருப்பதால் உலகக்கோப்பைக்கான 11 அல்லது 12 பேர் கொணட இந்திய அணியை தெரிவிப்பது கடினம்’’ என்றார்.
    Next Story
    ×