search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 105-வது உறுப்பினரானது அமெரிக்கா
    X

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 105-வது உறுப்பினரானது அமெரிக்கா

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 105-வது உறுப்பினரானது அமெரிக்கா. இதனால் அமெரிக்காவால் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்த முடியும். #ICC
    கிரிக்கெட் போட்டி பல்வேறு நாடுகளில் விளையாடப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், நியூசிலாந்து உள்பட முக்கிய அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    உலகளவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்த ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக 2017-ம் ஆண்டு அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலபடுத்தும் வகையில் ஆட்சிமன்றக்குழு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஐசிசி 105-வது உறுப்பினராக அமெரிக்காவை இணைத்துள்ளது.

    இதன்மூலம் அமெரிக்காவால் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்த முடியும்.
    Next Story
    ×