search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: இலங்கை அணியில் குஷால் பெரேரா சேர்ப்பு
    X

    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: இலங்கை அணியில் குஷால் பெரேரா சேர்ப்பு

    இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் காயம் அடைந்துள்ளதால் ஆஸ்திரேலியா தொடரில் குஷால் பெரேராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. #AUSvSL
    இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 24-ந்தேதி பிரிஸ்பேனில் பகல்- இரவாக தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குஷால் பெரேரா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தனுஷ்கா குணதிலகா நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக முன்னாள் கேப்டன் மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை.

    இலங்கை அணி வருமாறு:-

    சண்டிமல் (கேப்டன்), கருணாரத்னே, திரிமானே, குஷால் மெண்டிஸ், சமர விக்ரமா, தனஞ்ஜெயா டி சில்வா, ரோசன் சில்வா, டிக்வெல்லா, குஷால் பெரேரா, திசாரா பெரேரா, சண்டகன், லக்மல், நுவன் பிரதீப், எல். குமாரா, சமரவீரா, ரஜிதா.
    Next Story
    ×