search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து பிஞ்ச், மார்ஷ் சகோதரர்கள், ஹேண்ட்ஸ்காம்ப் அதிரடி நீக்கம்
    X

    இலங்கை டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து பிஞ்ச், மார்ஷ் சகோதரர்கள், ஹேண்ட்ஸ்காம்ப் அதிரடி நீக்கம்

    இலங்கை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆரோன் பிஞ்ச், மார்ஷ் சகோதரர்கள், ஹேண்ட்ஸ் காம்ப் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். #AUSvSL
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்திய வீரர்கள் ஐந்து சதங்கள் அடித்த போதிலும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

    குறிப்பாக ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் ஆகியோரால் எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. அதேபோல் ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக களம் இறங்கி சாதிக்க முடியவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சொற்ப ரன்களே சேர்த்தார்.



    இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்த நான்கு பேரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். புகோவ்ஸ்கி, ஜோ பர்ன்ஸ், ரென்ஷா ஆகியோர் அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டிம் பெய்ன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 2. ஹசில்வுட், 3. ஜோ பர்ன்ஸ், 4. கம்மின்ஸ், 5. மார்கஸ் ஹாரிஸ், 6. டிராவிஸ் ஹெட், 7. உஸ்மான் கவாஜா, 8. மார்னஸ் லாபஸ்சேக்னே, 9. நாதன் லயன், 10. வில் புகோவ்ஸ்கி, 11. ரென்ஷா, 12. மிட்செல் ஸ்டார்க், 13. பீட்டர் சிடில்.

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 24-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. 2-வது போட்டி பிப்ரவரி 1-ந்தேதி கான்பெர்ராவில் தொடங்குகிறது.
    Next Story
    ×