search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேச பிரிமீயர் லீக்: ஸ்மித் அணி 63 ரன்னில் சுருண்டு பரிதாபம்
    X

    வங்காள தேச பிரிமீயர் லீக்: ஸ்மித் அணி 63 ரன்னில் சுருண்டு பரிதாபம்

    வங்காள தேச பிரிமீயர் டி20 லீக்கில் மோர்தசாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்மித் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் 63 ரன்னில் சுருண்டது. #BPL
    வங்காள தேசத்தில் வங்காள தேச பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இன்று டாக்காவில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் ஸ்மித் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் - மோர்தசா தலைமையிலான ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ரங்க்பூர் ரைடர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கொமிலா விக்டோரியன்ஸ் அணியின் தமிம் இக்பால், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மோர்தசாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கொமிலா அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.

    தமிம் இக்பால் 4 ரன்னிலும், லெவிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்னிலும், ஸ்மித் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் 18 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது கொமிலா அணி தத்தளித்தது.

    அதன்பின் நஸ்முல் இஸ்லாம் சிறப்பாக பந்து வீச கொமிலா விக்டோரியன்ஸ் அணி 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 63 ரன்னில் சுருண்டது. மோர்தசா நான்கு ஒவரில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். நஸ்முல் இஸ்லாம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 63 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ரங்க்பூர் ரைடர்ஸ் 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    Next Story
    ×