search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவில் சாதனைப் படைத்த இந்திய அணிக்கு ஊக்கத்தொகை: பிசிசிஐ அறிவிப்பு
    X

    ஆஸ்திரேலியாவில் சாதனைப் படைத்த இந்திய அணிக்கு ஊக்கத்தொகை: பிசிசிஐ அறிவிப்பு

    ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. #AUSvIND #BCCI
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது.

    சிட்னியில் நடைபெற்ற 4-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பிருந்தது. கடைசி இரண்டு நாட்கள் மழை பெய்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று சாதனைப் படைத்தது.

    இதனால் அணியின் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், சப்போர்ட் ஸ்டாஃப்-களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘ஊக்கத்தொகை ஒவ்வொரு வீரர்களும் போட்டியில் வாங்கும் சம்பளத்திற்கு சமமான அளவில் வழங்கப்படும். ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்த வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் தலா 15 லட்சம் ரூபாயும், ஆடும் லெவனில் இடம்பெறாத வீரர்களுக்கு தலா 7.5 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

    பயிற்சியாளர் ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பயிற்சியாளர்கள் அல்லாத சப்போர்ட் ஸ்டாஃப்-களுக்கு சம்பளம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
    Next Story
    ×