search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிட்னி டெஸ்டில் ஆரோன் பிஞ்ச்-ஐ நீக்க வேண்டும்: ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் ஆலோசனை
    X

    சிட்னி டெஸ்டில் ஆரோன் பிஞ்ச்-ஐ நீக்க வேண்டும்: ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் ஆலோசனை

    இந்தியாவிற்கு எதிரான சிட்னி டெஸ்டில் ஆரோன் பிஞ்ச்-ஐ நீக்கிவிட்டு சுழற்பந்து வீச்சாளர் மார்னஸ் லாபஸ்சாக்னேவை சேர்க்க வேண்டும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது.

    பொதுவாக சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் ஆஸ்திரேலியா மார்னஸ் லாபஸ்சாக்னே என்ற சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை அணியில் சேர்த்துள்ளது.

    இந்நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச்-ஐ நீக்கிவிட்டு சுழற்பந்து வீச்சாளர் மார்னஸை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

    ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ஆரோன் பிஞ்ச்-ஐ நீக்கிவிட்டு லாபஸ்சானேவை அணியில் சேர்க்க வேண்டும். உஸ்மான் கவாஜா தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும்’’ என்றார்.

    ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘மார்கஸ் ஹாரிஸ் உடன் ஷான் மார்ஷ் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். உஸ்மான் கவாஜா 3-வது வீரராக களம் இறங்க வேண்டும். டிராவிஸ் ஹெட் 4-வது இடத்தில் களம் இறங்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×