search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: மும்மூர்த்திகளுக்கு ஓய்வு அளிக்கிறது ஆஸ்திரேலியா
    X

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: மும்மூர்த்திகளுக்கு ஓய்வு அளிக்கிறது ஆஸ்திரேலியா

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா அணியில் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் மூன்று பேரும் அதிக ஓவர்கள் வீசினார்கள். குறிப்பாக மெல்போர்னில் இந்தியா 160 ஓவர்களுக்கு மேல் விளையாடியது.

    சிட்னி டெஸ்ட் முடிந்த உடன் இந்தியாவிற்கு எதிராக  மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடரில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. அதன்பின் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.



    2019-ல் உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் வருவதால் மும்மூர்த்திகளான ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோரின் பந்து வீச்சு பளுவை குறைப்பதற்காக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

    மூன்று பேருக்கும் ஓய்வு அளித்தால் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு எதிராக இரண்டாம் நிலை பந்து வீச்சாளர்களுடன் விளையாடும்.
    Next Story
    ×