search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாதனைப் பட்டியலில் இடம் பிடிப்பது யார்?: பும்ரா, ஷமி இடையே கடும்போட்டி
    X

    சாதனைப் பட்டியலில் இடம் பிடிப்பது யார்?: பும்ரா, ஷமி இடையே கடும்போட்டி

    ஒரே வருடத்தில் வெளிநாட்டு தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடம்பிடிக்க பும்ரா, முகமது ஷமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. #AUSvIND
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் மிகவும் சிறப்பான வகையில் பந்து வீசி வருகின்றனர். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் அசத்திய இவர்களின் சாதனை ஆஸ்திரேலியாவிலும் தொடர்கிறது.

    மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன் பும்ரா 39 விக்கெட்டுக்களும், முகமது ஷமி 43 விக்கெட்டுக்களும் வீழ்த்தியிருந்தனர். இதனால் ஒரே வருடத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க முகமது ஷமிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது.



    இந்தியாவிற்கான இந்திய வருடத்தின் கடைசி டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது. இதில் பும்ரா 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். முகமது ஷமி 1 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் பும்ரா 45 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார். ஷமி 43 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.



    2-வது இன்னிங்சில் முகமது ஷமி ஐந்து விக்கெட்டுக்களுக்கு மேல் வீழ்த்தினால் பும்ராவை பின்னுக்ககுத் தள்ள வாய்ப்புள்ளது. இல்லையெனில் பும்ரா முதல் இடம்பிடிப்பார். இதனால் இருவருக்கும் இடையில் 2-வது இன்னிங்சில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. இது இந்தியாவின் பந்து வீச்சிற்கு மேலும வலுசேர்க்கும்.

    கும்ப்ளே 2006-ல் 41 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார். இஷாந்த் சர்மா 2011 மற்றும் 2014-ல் தலா 38 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×