search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்
    X

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

    செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 181 ரன்னில் சுருண்டது. பாபர் ஆசம் மட்டும் தாக்குப்பிடித்து 71 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் சேர்த்திருந்தது. பவுமா 38 ரன்களுடனும், ஸ்டெயின் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.



    ஸ்டெயின் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த பவுமா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த டி காக், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா முன்னணி வகிக்க போராடினார். அவர் 45 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 223 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர், ஷாஹீன் ஷா அப்ரிடி தலா நான்கு விக்கெட்டுக்களும், ஹசன் அலி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். 42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    Next Story
    ×