search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை சேதப்படுத்தும்படி வார்னர் என்னைத் தூண்டினார்: கேமரூன் பான்கிராப்ட்
    X

    பந்தை சேதப்படுத்தும்படி வார்னர் என்னைத் தூண்டினார்: கேமரூன் பான்கிராப்ட்

    கேப் டவுன் டெஸ்டில் பந்தை சேதப்படுத்தும்படி துணைக்கேப்டனாக இருந்த வார்னர் என்னைத் தூண்டினார் என கேமரூன் பான்கிராப்ட் தெரிவித்துள்ளார். #BallTampering
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவதற்கு துணைக் கேப்டன் வார்னர்தான் மூளைக்காரணமாக இருந்தார் என்றும், இந்த விஷயம் ஸ்மித்திற்கு தெரிந்திருந்தது எனவும் விசாரணையில தெரிய வந்தது.

    இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

    இந்த விவகாரத்திற்குப் பிறகு முதன்முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது ‘‘நான் பால் டேம்பரிங் விவகாரத்தை தடுத்திருக்கலாம். கேப்டன் பொறுப்பில் தோல்வியடைந்து விட்டேன்’’ என்று கூறினார்.



    இந்நிலையில் துணைக்கேப்டனாக இருந்த வார்னர்தான் பந்தை சேதப்படுத்தும்படி என்னைத் துண்டினார் என்று பான் கிராப்ட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பான் கிராப்ட் கூறுகையில் ‘‘நாங்கள் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது வார்னர் என்னிடம் வந்து பந்தை சேதப்படுத்தும்படி கூறினார். அது நல்லதா? என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் இளம் வீரர் என்பதால் அணியில் தன்னுடைய மதிப்பு என்ன என்பதை யோசிக்க வேண்டியிருந்தது.

    சீனியர் வீரர்களிடம் இருந்து மரியாதை பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. மேலும் தவறுக்காக மிகப்பெரிய விலைக்கொடுக்க போகிறோம் என்பதையும் உணர்ந்திருந்தேன்’’ என்றார்.
    Next Story
    ×