search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு  தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
    X

    இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

    மத்திய அரசின் ஒப்புதல் இன்றி, தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா என்ற பெயரை பிரதிநிதித்துவப்படுத்துவதால் பிசிசிஐக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #BCCI
    மத்திய அரசிடம் இருந்து முறையான அங்கீகாரம் இன்றி நாட்டின் பிரதிநிதியாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த கீதா ராணி என்பவர் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


    பிசிசிஐ அமைப்புக்கு எதிராகவும், அதன் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும்படி மனுதாரர் கோரியுள்ளார். மேலும் பிசிசிஐ அமைப்பில் வீரர்கள் தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், எப்போதும் பாகுபாடு இருப்பதாகவும் புகார் கூறியுள்ளார். மற்ற விளையாட்டுக்களைப் போன்று கிரிக்கெட்டும் மத்திய விளையாட்டுத் துறையால் நேரடியாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கில் பிசிசிஐ மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளனர். #BCCI
    Next Story
    ×